நலமுடன் வீடு திரும்பினேன்" - இயக்குனர் பாரதிராஜா

Prabha Praneetha
2 years ago
நலமுடன் வீடு திரும்பினேன்" - இயக்குனர் பாரதிராஜா

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான பாரதிராஜாவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு தீவிர சிகிச்சை பெற்றுவந்த நிலையில் அவர் நலமுடன் வீடு திரும்பியுள்ளதாக பதிவிட்டுள்ளார்.

கொரோனா தொற்றின் மூன்றாவது அலை நாட்டை கடுமையாக பாதித்து வருகிறது. சமீப காலங்களில் பல பிரபலங்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு, அதிலிருந்து மீண்டு வந்துள்ளனர்.

அந்தவகையில் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான பாரதிராஜாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் இயக்குனர் பாரதிராஜா கொரோனா தொற்றில் இருந்து மீண்டு நலமுடன் வீடு திரும்பி விட்டதாக தெரிவித்துள்ளார்.

மேலும் நலம் விசாரித்த அனைத்து உறவுகளுக்கும் நன்றி என்று அவருடைய சமூக வலைத்தளப் பககத்தில் பதிவிட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!